இந்திய செய்திகள்செய்திகள்

ஆர்யன் கானுக்கு இன்று பிணை கிடைக்குமா?

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் பிணை மனு மீதான விசாரணை, இன்று (27) மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அவரது பிணை மனுவை நீதவான் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் ஆகியன நிராகரித்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில், பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய, ஆர்யன் கானின் பிணை மனு மீது பதிலளிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு, உயர் நீதிமன்றம் உதரவிட்டு இருந்தது. அதன்படி, நேற்று (26), போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், உயர் நீதிமன்றத்தில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், நேற்று மாலை நீதிபதி சாம்ப்ரே முன்னிலையில், பிணை மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான வக்கீல், ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யவில்லை, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்நிலையில் அவரைக்  கைது செய்து 20 நாள்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பது தவறானது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, மனு மீணைதான விசாரயை இன்று(புதன்கிழமை) ஒத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266