in ,

ஆளும் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

மறைந்த கட்சி தலைவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள தொழிலாளர் தின கொண்டாட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக மே தின பேரணியை முன்னெடுக்காது சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மே தின பேரணிகளை மாத்திரம் நடத்துவது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்துப் பேசப்பட்டதா? மே தினக் கூட்டத்தை இணைந்து நடத்த அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒப்புக்ககொண்டார்களா? என்பவை குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவளை விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இதில் பங்கேற்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பச்சோந்தி போல நிலைப்பாட்டை மாற்றுகிறார் பேராயர் – ஞானசார தேரர்

பொலிஸார் நால்வர் உட்பட யாழில் இன்று 7 பேருக்கு உறுதி!!