செய்திகள் யாழ்ப்பாணம்

ஆவரங்காலில் 22 பவுண் தங்கம் கொள்ளை!

ஆவரங்காலில் உள்ள வீடொன்றில் குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டை உடைத்து 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (08) இடம்பெற்றது என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றுவிட்டு வந்த போது, வீட்டின் கதவுகள் உடைத்திருந்துள்ளன. அது தொடர்பில் ஆராய்ந்த போதே 22 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

நோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த் அதிரடி!

Bavan

அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை கையளிப்பு!

G. Pragas

1000 ரூபாய் வழங்க முடியாவிட்டால் விலகுங்கள்

G. Pragas