செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

ஆவா குழுவின் பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரண்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரான ஆவா குழுவை சேர்ந்த கு.வினோத் என்பவர் இன்று (05) மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல வருட காலமாக ஆவா குழு என்ற அமைப்பினால், பல்வேறு வாள்வெட்டுக்கள் இடம்பெற்றதுடன், பல கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றன. இக்குழுவின் பிரதான நபரென கருதப்பட்ட வினோத், தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று சரணடைந்துள்ளார்.

அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் குற்றவாளியாக கருதப்பட்ட இவர் குறித்த வழக்கிற்காகவே நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

சரணடைந்த சந்தேக நபரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

தேர்தல் பதிவேட்டில் இருந்து ஒரு கிராமத்தில் 100 பேர் நீக்கம்

G. Pragas

இன்று 13 பேர்; எண்ணிக்கை 718

G. Pragas

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Tharani