சினிமா செய்திகள்

இசை வெளியீட்டு விழாவில் லாரன்ஸ் சர்ச்சைப் பேச்சு

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் “நான் கமல் போஸ்டரில் சாணி அடித்தேன்” என்று கூறியதாக கூறும் கருத்தை மறுத்துள்ளார் லாரன்ஸ்.

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கமல் பட பதாகை மீது சாணி அடித்தது பற்றி பேசியதை சிலர் மிகைப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதி தீவிர ரஜினி ரசிகனாக இருந்த போது சிறுவயதில் தன்னை அறியாமல் கமலுக்கு எதிராக அந்த காரியத்தை செய்ததாகவும் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

கமல் மீது அதிக மரியாதை உள்ளது என்றும், தான் பேசியது தவறு என நினைத்தால் யாரிடம் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தர்பார் இசை வெளியீட்டு விழாவில், பேசியதை முழுமையாக கேட்டால் உண்மை புரியும் எனவும்  அதில் கமலை பற்றி தவறாக ஏதும் பேசவில்லை என்றும் நடிகர் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முதல் முறையாக யானைகள் இறப்பு அதிகரிப்பு!

Tharani

யாழ் இந்துக் கல்லூரியில் நாவலர் விழா!

Bavan

படுகொலை செய்யப்பட்ட எந்த ஊடகவியலாளருக்கும் நீதி கிடைக்கவில்லை!

G. Pragas