in

இடிக்­கிற கைதான் ..! #ஆசிரியர் தலையங்கம்

ஆசிரியர் தலையங்கம் 12.01.2021 செவ்வாய்க்கிழமை

“அடிக்­கிற கைதான் அணைக்­கும்” என்­பது நேற்­றோடு ‘இடிக்­கிற கை தான் அமைக்­கும்’ என்று மாறி­விட்­டது. யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­குள் அமைக்­கப்­பட்­டி­ருந்த முள்­ளி­வாய்க்­கால் நினை­வுத்­தூபி யாரு­டைய ஆணை­யின் பேரில் இடிக்­கப்­பட்­டதோ, அதே துணை­வேந்­த­ரால் மீள அமைக்­கப்­ப­டு­வ­தற்­காக அடிக்­கல் நடப்­பட்­டி­ருக்­கி­றது.

உண்­மை­யில் தூபியை இடிக்க உத்­த­ர­விட்­டது துணை­வேந்­தர் போன்று வெளிப்­பார்­வைக்­குத் தோன்­றி­னா­லும் அவர் வெறும் அம்பு மட்­டுமே. அவரை எய்­த­வர்­கள் மிகக் கெட்­டித்­த­ன­மாக பழி­யில் இருந்து தப்­பித்­து­விட்­டார்­கள். பாவம் ஓரி­டம் பழி ஓரி­ட­மா­னது. தூபி இடிப்­போடு ஒட்­டு­மொத்த தமி­ழர்­க­ளும் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தரை எவ்­வ­ள­வுக்கு முடி­யுமோ அவ்­வ­ள­வுக்கு சபித்­து­விட்­டார்­கள். சமூக வலைத்­த­ளங்­க­ளில் மீம்ஸ், கார்ட்­டூன் என்று அவரை கழுவி ஊற்­றி­னார்­கள். ஆனால் நேற்று , மீண்­டும் தூபியை அமைப்­ப­தற்­காக அடிக்­கல் நாட்­டி­ய­வு­டன் துணை­வேந்­த­ரும் கறை நீங்­கி­ய­வ­ராகி விட்­டார்.

எடுப்­பார் கைப்­பிள்­ளை­யாக நடந்­து­கொண்­டால், என்­னென்ன விளை­வு­கள் வரும் என்­பதை துணை­வேந்­தர் கண்­கூ­டா­கக் கண்­டு­விட்­டார். அத்­தோடு யாரெல்­லாம் தூபியை இடிக்­கச் சொல்லி அவ­ருக்கு தொடர்ந்து அழுத்­தம் கொடுத்­தார்­களோ, அவர்­க­ளெல்­லாம் தங்­க­ளுக்­கும் இதற்­கும் சம்­பந்­தமே இல்­லா­தது போல கழன்று கொள்ள, ஒட்­டு­மொத்­தத் தமி­ழி­னத்­தின் சுட்டு விர­லும், துணை­வேந்­தரை நோக்கி நீண்­ட­தால் உண்­டான வலி­யை­யும் அவர் உணர்ந்­தி­ருப்­பார்.

இனி­யா­வது மேலி­டத்து அழுத்­தங்­க­ளுக்கு அடி­
ப­ணி­யா­மல், முன்­னர் பலா­லி­யிலே மாண­வர்­க­ளுக்­காக படை­ய­தி­கா­ரி­களை எதிர்த்து முழங்­கிய பழைய ‘சற்­கு­ண­ரா­ஜா­வாக’ அவர் கெத்­தோடு பல்­க­லைக்­க­ழ­கத்தை நிர்­வ­கிக்க வேண்­டும். துணை­வேந்­தர் மீது எவ­ரும் முன்­வி­ரோ­தம் கொண்டோ, காழ்ப்­பு­ணர்ச்­சி­யிலோ அவ­தூ­றுக் கற்­களை வீச­வில்லை. தமி­ழி­னப் படு­கொ­லை­யின் ஆன்­மா­வின் மீது கைவைத்­த­தா­லேயே எல்­லோ­ரது கோபப்­பார்­வை­யும் அவர் மீது திரும்­பி­யி­ருந்­தது. இப்­போது அடிக்­கல் நட்­ட­தும் அந்­தக் கோபம் இருந்த இடம் தெரி­யா­மல் பறந்து விட்­டது என்­ப­தும் உண்­மையே.

“மன்­னிப்­ப­வன் மனி­தன், மன்­னிப்­புக் கேட்­ப­வன் பெரிய மனி­தன்’ என்று  விரு­மாண்டி படத்­தி­லொரு வச­னம் வரும். அப்­ப­டியே துணை­வேந்­தர் தான் செய்த செய­லுக்கு பிரா­யச்­சித்­தம் தேட­மு­னைந்­தமை வர­வேற்­கப்­பட வேண்­டி­யதே. தான் பிடித்த முய­லுக்கு மூன்று கால் என்று அதி­கா­ரத் தோர­ணை­யோடு, பிடி­வா­த­மாக நிற்­கா­மல், தவறை உணர்ந்து அத­னைச் சீர்­செய்ய முனை­வ­தற்­கும் ஒரு மனம் வேண்­டும். அது துணை­வேந்­த­ருக்கு வாய்த்­தி­ருக்­கி­றது. ஆனா­லும் தூபி இடிப்பு விட­யம் அவ­ருக்கு ஒரு பாடம். எனவே வெறு­மனே அடிக்­கல் நாட்­டி­ய­தோடு நின்­று­வி­டா­மல், முள்­ளி­வாய்க்­கால் தூபியை முறைப்­படி அமைப்­ப­தற்­கான அனு­ம­தி­யைப் பெற்­றுக்­கொ­டுத்து, மிக விரை­வாக அதனை நிறு­வு­வதே துணை­வேந்­தர் மீதான களங்­கத்தை முற்­றா­கத் துடைக்­கும்.

விவேகானந்தரின் ஜனன தினத்துக்கு அனுமதி மறுப்பு

மட்டு. போதனாவில் 21 ஊழியர்களுக்கு தொற்று!