செய்திகள் பிரதான செய்தி

இதுவா சிறந்த தலைமைத்துவம்? கோத்தாவை தாக்கிய சஜித்!

இராணுவ வீரர்களை பாதுகாக்கும் ஒருவர் என்றால் ஒருபோதும் நான் பொறுப்பல்ல. இதற்கு எனது அண்ணா பொறுப்பல்ல. இதற்கு இராணுவத் தளபதியே பொறுப்பு கூற வேண்டும் என கூறியிருக்க மாட்டார் என்று கோத்தாபய ராஜபக்ச தொடர்பில் சஜித் பிரேமதா தெரிவித்தார்.

தொடன்கஸ்லந்தயில் இன்று (16) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும்,

பொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது. ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும். போரை நானோ அல்லது என்னுடைய சகோதரனோ வழிநடத்தி வெற்றிபெறச் செய்யவில்லை. அதற்கான தலைமைத்துவத்தை நாங்கள் வழங்கவில்லை. மாறாக இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே போரை வழிநடத்தி, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதை கோத்தாபய ராஜபக்ஷ அவராகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

இராணுவ வீரர்களை பாதுகாக்கும் ஒருவர் என்றால் ஒருபோதும் நான் பொறுப்பல்ல. இதற்கு எனது அண்ணா பொறுப்பல்ல. இதற்கு இராணுவத் தளபதியே பொறுப்பு கூற வேண்டும் என கூறியிருக்க மாட்டார். யுத்ததில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது எனது எதிர்த் தரப்பில் இருப்பவர் நேரடியாக சரத் பொன்சேகாவின் பக்கம் அவற்றை சுமத்தினார். பாதகமான விடயங்களுக்கு தான் தொடர்புபட மாட்டேன் என அவர் உடனடியாக தீர்மானித்தார். அண்ணாவும் பொறுப்பல்ல இராணுவ தளபதியே பொறுப்பென்றார். இதுவா சிறந்த தலைமைத்துவம்? இதுவா இராணுவத்தினரைப் பாதுகாக்கும் தலைமைத்துவம்?.

யுத்தப் பாதிப்பைப் பற்றிக்கேட்டவுடன் சரத் பொன்சேகாவை நோக்கி பந்தைக் கைமாற்றிவிட்டார். ஆனால் அவரைப் போன்று பந்தைக் கைமாற்றுபவன் நானல்லன். நாட்டின் தலைவன் என்ற ரீதியில் இராணுவத்தினரின் நலனுக்காக எவ்வித அர்ப்பணிப்பையும் செய்யத் தயாராக இருக்கின்றேன். ஜனாதிபதி தேர்தலில் எனது பிரதிவாதி கோத்தாபய ராஜபக்,ஷ மேஜர் ஜெனரல் 5 பேரையும், பிரிகேடியர் 5 பேரையும், கேணல் ஒருவரையும், கப்டன் தரத்திலுள்ள இருவரையும் 24 மணிநேரத்திற்குள் பதவியிலிருந்து நீக்கினார். அத்தகைய ஒருவரால் எவ்வாறு நாட்டை முன்நிறுத்தி நியாயமாக செயற்பட முடியும்?

கோத்தாபய ராஜபக்ஷவினால் ஏன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்த முடியாமல் உள்ளது? அவரால் ஏன் ஊடகவியலாளர்களின் வினாக்களை எதிர்கொண்டு பதிலளிக்க முடியாது என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்திருக்கிறது. அதனாலேயே செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முடியாத நிலையை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் எனது சவாலுக்கு இணங்கியேனும், நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உண்மையை கூறிவிட்டார். பத்துவருடங்களின் பின்னர் அவர் உண்மையை வெளிப்படுத்தியது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் – என்றார்.

Related posts

கணவனை தாக்கிய மனைவி கைது!

G. Pragas

கொரோனா தொற்று 1,905 ஆக உயர்வு!

கதிர்

கபாெத(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Tharani