செய்திகள் பிரதான செய்தி

இத்தாலியில் சிவப்பு அறிவித்தல்; ஒன்றுகூடத் தடை

இத்தாலி முழுவதும் சிவப்பு வலயமாக்கப்படுவதாக அந்நாடு விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே இச்சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னறிவித்தலின்றி நாட்டின் ஏனைய பகுதிக்குள் பயணப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, பொதுவிடங்களில் ஒன்றுகூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறும் அவசிய தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் பயணங்களுக்கு அனுமதி கோருமாறும் இத்தாலிய பிரதமர் Giuseppe Conte உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இன்று அதிகாலை முதல் இது அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் 60 மில்லியன் மக்கள் உள்ளனர் என்பதோடு, அந்நாட்டின் 16 மில்லியன் மக்கள் வசிக்கும் அந்நாட்டின் வடபகுதி ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

Tharani

வாகரையில் நத்தார் ஒளி விழா!

G. Pragas

அடியாட்களை வைத்து ஆட்சி செய்ய முடியாது! – சஜித்

G. Pragas

Leave a Comment