உலகச் செய்திகள் செய்திகள்

இத்தாலியில் ரூ.3¾ கோடிக்கு மோனலிசா ஓவியம் ஏலம்!

இத்தாலியில் ‘ரூபிக் கியூப்ஸ்’ என்ற பிளாஸ்டிக் சதுரங்களை வைத்து வடிவமைக்கப்பட்ட மோனலிசாவின் ஓவியம் ரூ.3 கோடியே 70 லட்சத்துக்கு ஏலம் போனது.

பிரான்சை சேர்ந்த பிரபல கலைஞர் ஒருவர் குழந்தைகளின் அறிவு திறனை அதிகரிக்க உதவும் ‘ரூபிக் கியூப்ஸ்’ என்ற விளையாட்டு பொருளில் உள்ள கண் கவர் பிளாஸ்டிக் சதுரங்களை வைத்து மோனலிசா ஓவியத்தை வடிவமைத்தார்.

மோனலிசாவின் தனித்துவமான புன்னகை மாறாமல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஓவியம் கலை பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பிரான்சில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் இந்த ஓவியம் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாரீசில் உள்ள பிரபல ஏல நிறுவனம் ஒன்று, நேற்று முன்தினம் மோனலிசாவின் இந்த ஓவியத்தை ஏலத்தில் விட்டது. இந்த ஓவியத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1 கோடி ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனாலும் ஏலம் தொடங்கியதுமே அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். இறுதியில் மோனலிசாவின் ஓவியம் ரூ.3 கோடியே 70 லட்சத்துக்கு ஏலம் போனது.

Related posts

அபிவிருத்தி ஊடாக நல்லிணக்கம் ஏற்படும்- கோத்தா

கதிர்

கொரோனா வைரஸ் தாக்கம்: எதனோல் பாவித்து ஒழிக்க நடவடிக்கை

Tharani

பல்கலைகழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிலுவை திங்கட்கிழமை வழங்கப்படும்

Tharani

Leave a Comment