பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்யாவில் இந்தியக் கடைகளைத் திறப்பது குறித்து பேச்சு நடத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
நேற்றும் இன்றும் நடைபெறும் 14-ஆம் பிரிக்ஸ் மாநாட்டில் ஐந்து நாடுகள் கலந்துகொள்கின்றன. இதில் ரஷ்யா, சீனா, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளின் அதிபர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றுகையில்,
பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்ய நாட்டின் இருப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியக் கடைகளை ரஷ்யாவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் சீனாவின் வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள் போன்றவற்றின் பங்கை ரஷ்ய சந்தையில் அதிகரிக்கவும் பேச்சு நடத்தப்படுகிறது – என்றார்.