செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

இந்தியர்கள் மூவருக்கு யாழ் மேல் நீதிமன்றம் தண்டனை விதித்தது

இந்தியாவில் இருந்து இலங்கையின் வடக்கு கடற்பரப்பு ஊடாக கஞ்சாப் போதைப் பொருளைக் கடத்திய இந்தியர்கள் மூவருக்கு தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று (11) தீர்ப்பளித்தது.

2014ம் ஆண்டு இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் படகில் பயணித்த இந்தியர்கள் மூவர் திருகோணமலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 70.1 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டது.

அவர்கள் மூவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு எதிராக நஞ்சு அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி பிரதிவாதிகளுக்கு நேற்று மன்றில் குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டது. எதிரிகள் மூவரும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து குற்றவாளிகள் மூவருக்கும் 40 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அந்தத் தண்டனை 10 ஆண்டுகளுக்கு (120 மாதங்கள்) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் மூவரும் தலா 50 ஆயிரம் ரூபா பணத்தை சாட்சிகள் பாதுகாப்பு நிதியத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் அதனைச் செலுத்தத்தவறின் 2 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.

தமிழகத்தை சேர்ந்த இந்த மூன்று குற்றவாளிகளில் இருவர் சார்பில் சாட்சிகள் பாதுகாப்பு நிதியத்துக்கு பணம் செலுத்த எவரும் இல்லாததால் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தண்டனைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல்; ரவூப், ரிஷாட்டிடம் சிஐடி விசாரணை!

G. Pragas

ஒருமித்தநாடு ஒருமைப்பாடு என்ற விடயத்தை உருவாக்குவேன் – முல்லையில் சஜித்

G. Pragas

சீனாவில் இதுவரை 717 பேர் பலி!

G. Pragas

Leave a Comment