in ,

இந்தியாவின் புதிய தடுப்பூசி

இந்தியாவில் ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியானது, முதல் கட்டம் மற்றும் 2ஆவது கட்ட பரிசோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியது. தற்போது 3ஆவது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.

இதுபற்றி இந்திய தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.கே.அரோரா தெரிவித்ததாவது,

‘பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ள கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியானது, நோவாவாக்ஸ் தடுப்பூசியைப் போன்றது. கொரோனாவுக்கு எதிராக 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும். கேம் சேஞ்சராகவும் இருக்கலாம். தற்போது இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது. ஒக்ரோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும்’ என்றார்.

அமோக விற்பனையில் நயனின் “நெற்றிக்கண்” திரைப்படம்

குழந்தையை மரப்பெட்டியில் வைத்து கங்கையில் மிதக்கவிட்ட நவீன குந்தி