செய்திகள்பிரதான செய்தி

இந்தியாவென நடுக்கடலில் இறக்கிவிடப்பட்ட அகதிகள்

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக செல்ல முற்பட்ட 6 பேரை இந்தியா எனத் தெரிவித்து கடத்தல்காரர்கள் நடுக்கடலில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

மன்னாரிலிருந்து படகு மூலம் தப்பிச் செல்ல முற்பட்வர்கள் இந்தியாவின் ஆளுகையில் உள்ள திடல் எனத் தெரிவித்து தரை இறக்க விடப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அகதிகள் நின்ற இடம் இந்தியாவின் ஆளுகை கரையோரம் அல்ல இலங்கை ஆளுகைப் பிரதேசம் எனக் கண்டறியப்பட்டது.

அதனையடுத்து இலங்கைக் கடற்படை சம்பவ இடத்துக்கு சென்று நடுக்கடலில் தத்தளித்த ஆறுபேரையும் கைதுசெய்து மீட்டுவந்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266