in

இந்தியாவைப் போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும் அபாயம்!!!

தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை

“இலங்கையில் நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமை தெளிவாகின்றது. அதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமாயின் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. எனவே, அந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்கு மக்கள் சார்பில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.”

– இவ்வாறு தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இந்தியாவில் தற்போதுள்ள நிலைமையைக் கவனத்தில்கொண்டு இலங்கையில் முன்னாயத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த நிலைமையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அங்குள்ள நிலைமையைப் போன்று ஏற்படக் கூடிய அபாயமும் உண்டு.

எனவே, தொற்றுக்கான ஏதேனுமொரு அறிகுறி காணப்படுபவர்கள் அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனினும், ஏதேனுமொரு வகையில் தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்குமானால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.

இந்த அபாயத்தைத் தவிர்த்துக் கொள்வதற்காக மக்கள் அவர்கள் சார்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது மிக அவசியமாகும்.

நாளாந்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களாக ஆயிரத்தைத் தாண்டுகின்றது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இதிலிருந்து இலங்கைக்குள்ளும் கொரோனா பரவலானது மிகத் தீவிரமாக அதிகரித்து வருவது தெளிவாகின்றது.

தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் கடந்த நாட்களில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் நிலை ஏற்படுமாயின் ஒரு தடுப்பூசியையேனும் வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலக சுகதார ஸ்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது” – என்றார்.

இலங்கை அபாய கட்டத்தில் உள்ளது!!

இன்றைய ஐ.பி.எல் போட்டி பிற்போடப்பட்டது!!