செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

இந்திய இராணுவத்தின் யாழ் வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்!

அமைதிப்படையாக வந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ் போதனாா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

1987ம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவம் வைத்தியசாலையில் கடமையாற்றிய பணியாளர்கள் 21 பேரை மிகக் கொடூரமாக சுட்டுப்படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கரப்பந்து மைதானம் திறந்து வைப்பு!

G. Pragas

புளுமென்டல் சஞ்சீவவின் மனைவி, மகன் கைது!

G. Pragas

பச்சிலைப்பள்ளியில் பண்பாட்டு பெருவிழா

Tharani