செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தி

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானம்!

மின்பாவனையிலான பொது போக்குவரத்து சேவையினை 2030ஆம் ஆண்டு காலப்பகுதியில் 30 சதவீதமளவில் பொது போக்குவரத்து சேவையில் விரிவுப்படுத்த கொள்கை ரீதியில் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது பொது போக்குவரத்து சேவை தொடர்பில் சுயாதீன உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214