செய்திகள் விளையாட்டு

இந்திய பெண்கள் அணியிடம் தென்னாபிரிக்கா தோல்வி!

இந்திய பெண்கள் அணிக்கும் தென்னாபிரிக்க பெண்கள அணிக்கு இடையில் இடம்பெற்று வரும் 5 போட்டிகளை கொண்ட ரி-20 தொடரின் நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய பெண்கள் அணி 57 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

மழை காரணமாக 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய பெண்கள் அணி 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது

துடுப்பாட்டத்தில் சபாலி வர்மா 46 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் என் டி க்ளெர்க் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க பெண்கள் அணி 17 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 89 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் லாரா வொல்வர்டித் 23 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் பூனம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

Related posts

சஜித்துக்கே வெற்றி வாய்ப்பு – ரோஷி

G. Pragas

ரஜினியை சந்தித்தார் விக்கி; வடக்கிற்கு வருமாறு அழைத்தார்

G. Pragas

பல கொலைச் சந்தேக நபர்கள் கைது!

G. Pragas

Leave a Comment