செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

இந்திய மீனவர்களை எதிர்த்து தீவக மீனவர்கள் போராட்டம்!

அத்துமீறி இடம்பெறும் இந்திய இழுவைப் படகு மீன்பிடித் தொழிலை தடை செய்ய வலியுறுத்தி தீவக மீனவர்கள் இன்று (27) யாழ் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.

யாழ் பண்ணைப் பகுதியில் இருந்து இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டதன் பின்னர், அங்கிருந்து காங்கேசன்துறை வீதி வழியாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலம் வரை சென்றதுடன் அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மேலும், அமைச்சரின் பிரதிநிதிகளிகளிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்திற்குச் சென்று, அங்கும் தூதுவரிடம் மகஜர் கையளித்தனர்.

இந்திய இழுவைப் படகின் அத்துமீறலால் தொழில்கள் பாதிக்கப்படுவதுடன் தமது பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

எனவே, இந்திய இழுவைப் படகின் அத்துமீறிய தொழில் முறையைத் தடை செய்யுமாறும், வளங்களைச் சூறையாடுவதைத் தடை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அவுஸ்திரேலிய பிரதமருடன் ஜனாதிபதி துயர் பகிர்வு

Tharani

“ஈபிடிபி துணைக் குழுவே வன்முறையை நிறுத்து” யாழில் பாேராட்டம்!

கதிர்

ஈரானில் 4 ஆயிரம் கைதிகள் தற்காலிகமாக விடுவிப்பு!

Tharani

Leave a Comment