செய்திகள்பிந்திய செய்திகள்

இந்­திய முட்­டையை இறக்­கு­மதி செய்க!- பேக்­கரி உரி­மை­யா­ளர் சங்­கம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முட்­டை­யின் விலை உயர் ­வைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தி­யா­வி­லி­ருந்து குறைந்த விலை­யில் முட்­டை­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு உட­ன­டி­யா­கத் தலை­யி­டு­மாறு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தி­டம் ­இ­லங்கை பேக்­கரி உரி­மை­யா­ளர்­கள் சங்­கம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது­கு­றித்து சங்­கத்­தின் தலை­வர் ஜெய­வர்த்­தன தெரி­வித்­த­தா­வது,

இந்­தி­யா­வில் தற்­போது முட்டை ஒன்­றின் விற்­பனை விலை சுமார் 18 ரூபா­வாக உள்­ளது.இந்­தி­யா­வில் இருந்து முட்­டையை இறக்­கு­மதி செய்து ஒரு முட்­டையை 20 ரூபா­வுக்கு வழங்­கு­வது மிக­வும் எளி­தா­னது.

தற்­போது இங்கு ஒரு முட்­டை­யின் விலை 58, 60, 65 ரூபா­வாக உள்­ளது. இதனை நியாய விலை­யில் விற்­கா­மல் விற்­ப­னை­யா­ளர்­கள் தங்­கள் விருப்­பத்­துக்கு ஏற்ப ஆளுக்கு ஒரு விலை­யில் விற்­கின்­ற­னர்.

கோழி தீவனம் மற்றும் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பதால் இந்த விலை அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்படுகிறது. இத­னால் நுகர்­வோர் சுரண்­டப்­ப­டு­கின்­ற­னர்-என்­றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214