கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி

இந்து மயானத்தில் இருந்து பயங்கரவாதியின் தலையை அகற்றும் பணி ஆரம்பம்

மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட சீயோன் ஆலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி எம்.என்.எம்.அசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் பணி சற்றுமுன்னர் பலத்த பாதுகாப்புடன ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் குறித்த தலை தோண்டி எடுக்கப்படுகிறது.

அண்மையில் குறித்த குண்டுதாரியின் தலையை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதையடுத்து பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு பல்லடி பாலத்திற்கு அருகில் பாதையை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டு கலைத்திருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த தலையை மீண்டும் தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.

Related posts

சமூக அக்கறை – ஓர் பார்வை

Tharani

அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்; 80 பேர் பலி!

Bavan

கொரோனாவில் இருந்து மேலும் மூவர் நலம்!

Bavan