உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் தீப்பிடித்தது சிறை 41 கைதிகள் சாவு!

தீப்பிடித்தது சிறை 41 கைதிகள் சாவு!

இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள டேங்கராங் சிறையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் 41 கைதிகள் உடல் கருகி மாண்டனர். இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.

டேங்கராங் சிறையில் போதைப்பொருள் கடத்தல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 1,225 கைதிகளை அடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச்சிறையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 41 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 40 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.எனினும் மின் கசிவாலேயே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,061