in , ,

நியுசிலாந்து, இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!!! சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!!!

நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சுனாமி அலை உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிஜி, நியூசிலாந்து மற்றும் வனுவாட்டுவின் சில கடலோர பகுதிகளில் கடல் அலைகள் 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் வரை எழுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை இந்தோனேசியாவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமாத்திரா தீவின் கடலோர பகுதியில், 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. எனினும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கில் 21 பேருக்கு தொற்று!

கொரோனா தடுப்பூசி பெற விரும்புகிறீர்களா? – இதோ இணையம் அறிமுகம்!