in

இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள், பயணிகள் உடல்கள் மீட்பு!!

இந்தோனேசியா, ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து போண்டியானா நகருக்குப் பறப்பை மேற்கொண்ட பயணிகள் விமானம் (SJI-182) காணாமல் போயிருந்த நிலையில், அந்த விமானத்தின் சிதைவுகள், பயணிகளின் உடல்கள் ஜாவா கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விமானத்தில் 50 பயணிகள், 12 விமானப் பணியாளர்கள் பயணித்துள்ளனர். இவர்களில் 5 வயதுக் குழந்தைகள், ஒரு கைக்குழந்தை ஆகியோரும் அடங்குகின்றனர்.

நேற்று இந்த விமானம் தனது பறப்பை மேற்கொண்ட 4 ஆவது நிமிடத்தில் தொடர்புகளை இழந்தது. அதன்பின்னர் அந்த விமானத்துடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை.

அந்த நாட்டுத் தகவல்களின்படி, 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென 3 கிலோமீற்றர் கீழிறங்கியது என்று ரேடரில் அவதானிக்கப்படடுள்ளது.

விமானம் புறப்பட்ட ஓரிரு நிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி விமானத்தை 29 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க அனுமதி கேட்டுள்ளார். அதன்பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அருகில் உள்ள தீவில் உள்ள மக்கள் பெரும் சத்தத்துடன் வானத்தில் ஒரு பொருள் வெடித்துச் சிதறியதைக் கண்டதாகக் கூறியிருந்தனர். கப்பல் ஒன்றில் பயணித்தவர்கள் இந்தச் சம்பவத்தைப் பார்த்திருக்கின்றனர்.

தற்போது ஜாவா கடற்பரப்பில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், விமானச் சிதைவுளும், உடல்களும் மீட்கப்பட்டுள்ளன என்று அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தூபி இடிப்பால் அதிர்ச்சி! போராட்டத்துக்கு ஆதரவு! – பல்கலை. ஊழியர் சங்கம் அறிக்கை!!

ஹரினின் உயிருக்கு ஆபத்து, ஜனாதிபதியே முழுப்பொறுப்பு – சஜித் பிறேமதாச !!!