செய்திகள்

இந்த ஆட்சியின் பலனே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

ஜனாதிபதியாக நான் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றியவுடன், பாதாள உலகக் குழுவினரை முழுமையாக இல்லாது செய்வேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெலிகம பிரதேசத்தில் நேற்று (20) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும்,

நான் தற்போது இங்கு வரும்போது, மக்களை சந்தித்தேன். இவர்கள் அனைவரும் பாதுகாப்பான நாடொன்றை வழங்குமாறுதான் எம்மிடம் கோரிக்கை விடுக்கிறார்கள். யுத்தத்தை நாம் நிறைவு செய்த பின்னர், தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாத அமைப்புக்களை கண்காணிக்க விசேட குழுக்களை நியமித்திருந்தோம்.

அதற்காக அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகளையும் வழங்கியிருந்தோம். எனினும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் தேசியப் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்தவொரு தெளிவுப்படுத்தலும் இவர்களுக்குக் கிடையாது.

இதன் பலனைத்தான் நாம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தெரிந்து கொண்டோம். நாம் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நாம் மீண்டும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவோம்.

அன்று நாம் பாதாள உலகக் குழுக்கள், போதைப்பொருள் வர்த்தகங்களை இல்லாது செய்திருந்தோம். இந்த செயற்பாட்டையும் நாம் மீண்டும் ஆரம்பிப்போம். எமது நாடு தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. எம்மைப் பொறுத்தவரை நாட்டை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எமது பிரதான நோக்கமாகும் – என்றார்.

Related posts

மரத்தில் ஏறி நபரொருவர் போராட்டம்!

கதிர்

தீபாவளி முற்கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி!

G. Pragas

கொழும்பு – மன்னார் பேருந்தில் ஹெரோயின் மீட்பு

கதிர்