செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தி

இந்த ஆட்சி நீடித்­தால் சர்­வ­தேச ஆத­ரவை முற்­றாக இழப்­போம் -ஜி.எல்.பீரிஸ்

இந்த ஆட்சி நீடித்­தால் ஜெனி­வா­வில் இலங்­கைக்கு 6 நாடு­கள் மட்­டு­மல்ல எந்­த­வொரு நாடும் ஆத­ரவு வழங்க முன் ­வ­ராது. சர்­வ­தேச நாடு­க­ளின் ஒத்­து­ழைப்­பின்றி இலங்கை அநா­தை­யா­கும் நிலையே ஏற்­படும் – –

இவ்­வாறு முன்­னாள் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரும் டலஸ் அழ­கப்­பெ­ரும தலை­மை­யி­லான ‘சுதந்­திர மக்­கள் சபை­யின் முக்­கி­யஸ்­த­ரு­மான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜி.எல்.பீரிஸ் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

‘நான் இலங்­கைப் பிரஜை என்ற ரீதி­யில் எமது நாட்­டுக்கு ஆத­ர­வா­கவே இருப்­பேன். இலங்கை மீதான சர்­வ­தே­சப் பொறி­மு­றையை ஒரு­போ­தும் ஆத­ரிக்­க­மாட்­டேன். உள்­நாட்­டுப் பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ள­கப் பொறி­மு­றை­யூ­டா­கவே தீர்­வு­காண வேண்­டும். நான் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த காலங்­க­ளில் ஜெனிவா விவ­கா­ரங்­களை நாட்­டுக்கு ஆபத்து ஏற்­ப­டா­த­வா­றும், நாட்­டுக்கு அப­கீர்த்தி ஏற்­ப­டா­த­வா­றும் சாது­ரி­ய­மா­கக் கையாண்­டேன்.

ஆனால், தற்­போது நிலைமை எல்லை மீறிப் போகின்­றது போல் தெரி­கின்­றது. இந்த ஆட்சி நீடித்­தால் ஜெனி­வா­வில் இலங்­கைக்கு 6 நாடு­கள் மட்­டு­மல்ல எந்­த­வொரு நாடும் ஆத­ரவு வழங்க முன்­வ­ராது. சர்­வ­தேச நாடு­க­ளின் ஒத்­து­ழைப்­பின்றி இலங்கை அநா­தை­யா­கும் நிலையே ஏற்­ப­டும். எனவே, ஜன­நா­யக வழி­யில் இந்த ஆட்­சியை நாம் கவிழ்த்தே தீர வேண்­டும். நாட்­டின் மீது பற்­றுள்ள அனை­வ­ரும் இந்த நட­வ­டிக்­கைக்­காக ஓர­ணி­யில் திரள வேண்­டும்’ – என்­றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266