புதினம் தெரியுமோ?

இந்த நிகழ்வுக்கு கனவு பாழான எம்.பிக்கு அழைப்பில்லை, அழைப்பிதழில பேருமில்லை….

நேற்று மயிலிட்டி துறைமுகத்தில இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கெண்டு நேற்று அடிக்கல் நட்டவை. இந்த நிகழ்வுக்கு கனவு பாழான எம்.பிக்கு அழைப்பில்லை, அழைப்பிதழில் பேருமில்லை.

ஆனால் இப்பிடி அழைப்பிதழில் பேர் போடாட்டியும் வெக்க துக்கம் இல்லாமல் எல்லாத்துக்கும் போற ஆள் தானே அவர். அதால இதுக்கும் போனவர். அவரைக் கண்டவுடன கடற்றொழில் அமைச்சர் கூப்பிட்டு மரியாதை செய்து, பேசுறதுக்கும் சான்ஸ் குடுத்திருக்கிறார்.

அதால கனவு பாழான எம்.பிக்கு கடும் சந்தோசம். ’மைக்’கை வாங்கினவர், அமைச்சரை கண்டபடி புளுகத் தொடங்கிட்டார். இவ்வளவுநாளும் எந்த அமைச்சரை ஓரம் கட்டினாரோ அவரையே இப்பிடி பப்ளிக்கா புகழ்ந்து ஐஸ் வைக்க , சுத்த் நிண்டவைக்கு இது கனவா, நனவா எண்டு சந்தேகம் வந்திட்டு.

அமைச்சரோட மல்லுக்கு நிக்காமல் சேர்ந்து ஓடச் சொல்லி , கனவுக்காரருக்கு மேலிடத்து ஓர்டராம். அதாலதான் இப்பிடியொரு மாற்றம்.

= பட்சி

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282