in

இந்த மாதத்தில் மட்டும் மன்னாரில் 49 பேருக்கு தொற்று!!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 18 நாள்களில் மட்டும் 49 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் தற்போதுவரை 66 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 49 பேர் இந்த மாதம் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 20 பேர் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேவை இன்றி நகர் பகுதியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

26 வயது இளம் குடும்பப் பெண் உயிரிழந்த நிலையில் மீட்பு!!

மின் கட்டணம் செலுத்த 6 மாதங்கள் அவகாசம்!