கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

இந்நாட்டை மீண்டும் இனவாத தீ கருக்கி விடக்கூடாது – ரிஷாட்

தமிழர், முஸ்லிம்களின் ஒற்றுமையை நிலைப்படுத்த சஜித் பிரேமதாசவை வெல்லச் செய்வோம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சஜித்தை ஆதரித்து மட்டக்களப்பில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

அரசியல் விரிசல்களுக்கு அப்பால் கட்சியின் நலனைக் காட்டிலும் சமூகத்தினதும், நாட்டினதும் நன்மை கருதி சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க ஒரே குடையின் கீழ் அணி திரண்டுள்ளோம். இந்நாட்டை மீண்டும் இனவாதத் தீ கருக்கி விடக்கூடாது என்பதற்காகவும் பரம்பரை ஆட்சியொன்று மீண்டும் உருவாக இடமளிக்கக் கூடாது என்பதற்காகவுமே இத்தனை பிரயத்தனங்களை எடுத்துள்ளோம்.

கடந்த காலங்களில் நாம் பட்ட துன்பங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது. பேரினவாதிகள் அப்பாவித் தமிழர்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் கொடுமைப்படுத்திய யுகத்தை உருவாக்க நீங்கள் எவருமே துணை போகக் கூடாது.

நாம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. கடந்த காலம் நமக்கு ஒரு படிப்பினையாக அமைந்து விட்டது. மத வாதத்தையும், இன வாதத்தையும் கிளறி எங்களை அடக்கி ஒடுக்க முயன்ற சக்திகளுக்கு இந்த தேர்தலின் மூலம் சரியான கடிவாளம் போடப்பட வேண்டும் – என்றார்.

Related posts

மக்களுக்கு நுண் நிதி கடன் வசதிகளை வழங்க திட்டம்

Tharani

குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்கிறது

G. Pragas

ஜனாதிபதி பெயரை பயன்படுத்தி நிதி மோசடி; இருவர் கைது

Tharani