செய்திகள்பிரதான செய்தி

இன்றுமுதல் 3 மணிநேர மின்வெட்டு நடைமுறை

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3ஆவது மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ள நிலையில், இன்று முதல் மின்சார தடையை மூன்று மணித்தியாலங்கள் வரை அதிகரிப்பதற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, 2 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களுமாக காணப்பட்ட மின்வெட்டு நேரம், இன்று (27) முதல் மூன்று மணித்தியாலம் வரை அதிகரிக்கப்படவுள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வர 3 அல்லது 5 நாள்கள் செல்லும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

மின்உற்பத்தி நிலையங்களின் பயன்பாட்டு நிலைமை குறித்து முகாமைத்துவப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266