செய்திகள்

இன்று ஆரம்பமானது தபால் மூல வாக்குப்பதிவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது தபால் மூல வாக்குப்பதிவு இன்று (31) ஆரம்பமாகியுள்ளது.

அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட தபால் வாக்காளர்கள் இன்று மற்றும் நாளை மறுதினம் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தபால் வாக்காளர்களின் தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 04ம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தில் தபால் வாக்களிப்பினை மேற்கொள்ள முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 07ம் திகதி வாக்களிக்க கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

அதன்படி, தமது சேவை நிலையம் அமைந்துள்ள மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் எதிர்வரும் 07ஆம் திகதி தபால் வாக்கினை செலுத்தக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

காரை மோதிய புகையிரதம்; சங்கத்தானையில் சம்பவம்

G. Pragas

மாகாண மட்ட போட்டிக்கு தெரிவான மகாஜனா பூப்பந்து அணி!

G. Pragas

காற்றாலை அமைக்க அனுமதி; கைதடியில் போராட்டம்!

G. Pragas

Leave a Comment