நாளாந்த மின் துண்டிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும் மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் மொத்தம் ஒரு மணி 45 நிமிட மின்வெட்டு இன்று முதல் நடைமுறையாகும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தாா்.
கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.