செய்திகள் பிரதான செய்தி

இன்று 19 பேருக்கு தொற்று!

இலங்கையில் இன்று (14) இதுவரை 19 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,665 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 9 பேர், சேனபுர மையத்தில் 4 பேர் மற்றும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 6 பேர் என மொத்தம் 19 பேருக்கே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 666 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 1,988 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் வணிகர் சங்கத்தின் தீர்மானங்கள்

reka sivalingam

ஒருவரை கொன்ற அறுவருக்கு மரண தண்டனை!

G. Pragas

கொரோனாவில் இருந்து மேலும் மூவர் நலம்!

Bavan