in ,

இன்றைய நாள் இராசி பலன்கள்

இன்று!
சார்வரி வருடம், வைகாசி மாதம் 18ம் தேதி, ஷவ்வால் 7ம் தேதி,
31.5.2020 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை நவமி திதி பகல் 2:54 வரை,
அதன்பின் தசமி திதி, உத்திரம் நட்சத்திரம் நள்ளிரவு 12:41 வரை,
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

  • நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
  • ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
  • எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
  • குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
  • பரிகாரம் : வெல்லம்
  • சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்
  • பொது: ராமர், சூரிய பகவான் வழிபாடு.

மேஷம் : பெண்களின் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். சுபநிகழ்ச்சிக்கு தேவையான பணிகளை செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் இருந்த பிரச்னைகள் மறையும்.

ரிஷபம்: பெண்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்துக்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் ஏற்படலாம். அலுவலகத்திலிருந்து பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.

மிதுனம் : பூர்வ சொத்துக்களில் பாகப் பிரிவினை சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் சிறு தடைகளுடன் நடைபெறும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும்.

கடகம்: சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டு. வியாபாரிகளுக்கு செலவுகள் அதிகரித்தாலும் அதை பொறுமையுடன் கையாள்வது நல்லது. சொத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் மிகுந்த சிரமங்களுக்குப் பிறகே நிறைவேறும்.

சிம்மம் : பெண்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வர். உத்யோகத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தந்தை வழியில் நல்ல செய்தி வரும். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி எண்ணம் நிறைவேறும்.

கன்னி: வியாபாரிகளுக்கு இருந்த தொந்தரவுகள் குறையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு மேலதிகாரியிடம் நல்ல பெயரெடுப்பீர்கள்.

துலாம்: வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவில் இருக்கும். நிலுவைப் பணிகளை முடித்து நிம்மதி அடைவீர்கள். வாடகை கட்டடத்தில் நடத்திய தொழிலை சொந்த இடத்திற்கு மாற்ற முயற்சி செய்வீர்கள். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும்.

விருச்சிகம்: விலகிச் சென்ற உறவினர்கள் சமாதானம் பேசுவார்கள். தொழில் சீராக இருக்கும். ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டு நீங்கும். பல காலம் எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். புதிய நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்.

தனுசு: குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். முக்கிய பிரமுகர்கள் உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உதவி செய்ய முன்வருவர். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற்று மகிழ்ச்சி காண்பீர்கள்.

மகரம்: தாய்வழி உறவினர்களால் தக்க விதத்தில் ஆதரவு கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் எண்ணங்கள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

கும்பம்: அலுவலக விஷயமாக சிறிய அளவில் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். முக்கியச் செலவுக்காக பணம் புரட்ட முடியாமல் தவித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

மீனம்: அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். மகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்பதில் மிகுந்த ஆர்வம் கொள்வர்.

வரலாற்றில் இன்று 31.05.2020

தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ் பொது நூலகம்