in ,

இன்றைய நாள் இராசி பலன்கள்

இன்று!
சார்வரி வருடம், வைகாசி மாதம் 22ம் தேதி, ஷவ்வால் 11ம் தேதி,
4.6.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி நள்ளிரவு 3:22 வரை,
அதன்பின் பவுர்ணமி திதி, விசாகம் நட்சத்திரம் மாலை 6:35 வரை,
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.

  • நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
  • ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
  • எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
  • குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.

* சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
* பொது: வைகாசி விசாகம், முருகன் வழிபாடு

மேஷம்: எதிலும் உத்வேகத்துடன் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். அலுவலக ரீதியாக திட்டமிட்ட பயணங்களில் சிறு மாறுதல்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் அலட்சியம் வேண்டாம். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள்.

ரிஷபம்: வியாபாரிகளுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தின் வருமானம் பெருகும். அலுவலக பணியாளர்கள் தகுதிக்கேற்ப பதவி உயர்வு பெறுவர். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

மிதுனம் : குடும்பத்தில் ஒற்றுமை கூடும். பணியாளர்கள் மேலதிகாரியின் நன்மதிப்பை பெறுவர். கணவன் மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும்.

கடகம்: குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களின் அன்பைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பல ஆலோசனைகளை தந்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்கள் புகுந்த வீட்டின் பெருமையை பாதுகாப்பர்.

சிம்மம் : பெண்களின் சேமிப்பு பல நாட்களுக்குப் பிறகு உயரும். சமூகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசியல் பதவியில் இருப்பவர்களின் நட்பை பெறுவீர்கள். மேலதிகாரியால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.

கன்னி : கடந்த கால செய்கையால் இப்போது அனுகூலம் உண்டு. பணியாளர்களுக்கு இருந்த கவனச்சிதறல் நீங்கி பணியில் ஆர்வம் கூடும். கலைஞர்களுக்குத் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திருமணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.

துலாம் : விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். சகஊழியர்களுடன் இருந்த பகை நீங்கி ஒற்றுமை பிறக்கும். அக்கம் பக்கத்தினர் இடையே புது நட்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவதால் லாபம் கூடும்.

விருச்சிகம் : மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். வியாபாரத்தில் தகுந்த ஆலோசனைகள் கிடைப்பதால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியான திருப்பம் உண்டு. உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள்.

தனுசு : உத்தியோகத்தில் எதிர்பாலினத்தினரின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். பெண்களுக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டு பின் மறையும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தருவதாக அமையும்.

மகரம் : பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். வீடு கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.

கும்பம்: மன உளைச்சல் அதிகரித்தாலும் நம்பிக்கையோடு செயல்படுவீர்கள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்: நீண்டகால பிரச்னைகளை படிப்படியாகத் தீர்ப்பீர்கள். தொழில் சீராக இருக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். சகோதர, சகோதரி இடையே ஒற்றுமையை வளர்ப்பீர்கள். அலுவலக விவகாரங்களில் அரை குறையாக நின்ற பணி தொடரும்.

மஞ்சள் வெட்டுக் கிளிகள் குறித்து எச்சரிக்கை…!

நேற்று மட்டும் 66 பேருக்கு தொற்று!