in ,

இன்றைய நாள் இராசி பலன்கள்

இன்று!
சார்வரி வருடம், வைகாசி மாதம் 23ம் தேதி, ஷவ்வால் 12ம் தேதி,
5.6.2020 வெள்ளிக்கிழமை, பவுர்ணமி திதி நள்ளிரவு 1:26 வரை,
அதன்பின் பிரதமை திதி, அனுஷம் நட்சத்திரம் மாலை 5:29 வரை,
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்த – மரணயோகம்

  • நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
  • ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
  • எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
  • குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
  • பரிகாரம் : வெல்லம்
  • சந்திராஷ்டமம் : அசுவினி, பரணி
  • பொது : காஞ்சிப்பெரியவர் பிறந்த தினம், பவுர்ணமி, சத்யநாராயண பூஜை

மேஷம்: வியாபாரிகளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பொருளாதார விஷயமான முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

ரிஷபம் : பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. கலைத்துறையினருக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வகையில் ஒற்றுமை குறையும்படி நடந்துகொள்ள வேண்டாம்.

மிதுனம்: உங்கள் மகளின் திருமணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் குடும்ப விஷயங்களை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் லாபம் அதிகரிக்கும்.

கடகம்: மூத்த அதிகாரியின் ஆலோசனையால் கடினமான பணியைகூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் கொள்வர். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைத்து மகிழ்ச்சி கொள்வீர்கள்.

சிம்மம் : சரியான தருணத்தில் உதவும் நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள். பெண்கள் பணத்தின் அருமையை உணர்ந்து சேமிப்பில் ஆர்வம் கொள்வர். மகனுடைய திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள்.

கன்னி: கணவரின் நிதித் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அலுவலகத்தில் திட்டமிட்ட பணிகளை முடித்து நிம்மதி அடைவீர்கள். வியாபாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

துலாம்: நிலுவைப் பணிகளை முடிப்பதற்கு மேலதிகாரி உதவிகரமாக இருப்பார். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படாதபடி பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பெண்களுக்கு பேச்சில் நிதானம் தேவை.

விருச்சிகம்: உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்ற காரணமாக இருப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.

தனுசு : பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கலைஞர்கள் வாழ்வில் புதிய திருப்பங்கள் உண்டு.

மகரம்: அலுவலகத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மாணவர்கள் இணையதளம் மூலமாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்வர்.

கும்பம் : கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அதிகரிக்கும். வியாபரத் தொடர்பு விரிவடையும். அலுவல வேலையில் ஏற்பட்ட தவறுகளைச் சீரமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.

மீனம்: குடும்பத்தில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். அலுவலகத்தில் தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரிகளுக்கு நிலுவைத் தொகை வசூலாகும். அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

கொரோனா பலியெடுப்பு 4 இலட்சத்தை தொடுகிறது!

சீயோன் ஆலய குண்டுதாரி; குண்டுகளை பஸ்ஸிலேயே எடுத்து சென்றான்