ஏனையவை செய்திகள்

இன்றைய ஆரோக்கிய ஆலோசனை

முருங்கைக் கீரைச் சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக்கொண்டால் இருமல் உடனே நிற்கும்.

முருங்கை இலைச் சாற்றில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேன் கலந்து, முகத்தில் தடவி வந்தால் பருக்களும், கரும்புள்ளிகளும் மறையும்.

முருங்கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும். பொடுகும் வராது.

முருங்கைக் கீரையை நீர் சேர்க்காமல் அவித்து கண்கள் மீது வைத்துக் கட்டிக் கொண்டால் கண் நோய்கள் குணமாகும்.

முருங்கைக் கீரை(ஒரு கைப்பிடி),மிளகு(10) இரண்டையும் சேர்த்து அரைத்து, தொடர்ந்து 25 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

முருங்கைக் கீரையுடன் கறுப்பு எள் சேர்த்து கஷாயம் வைத்து தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

முருங்கைக் கீரையோடு உப்பு சேர்த்து அவித்து,தொடரந்து 21 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் குணமாகும்.

Related posts

குற்றச்சாட்டுகளில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி விடுவிப்பு!

reka sivalingam

நியமனத்தை வழங்குங்கள் – அரச அதிபரிடம் மகஜர்

G. Pragas

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani