செய்திகள் விளையாட்டு

இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா!

சுற்றுலா அஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (17) ராஜ்கோட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தமது 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 340 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் சிகார்த் தவான் 96 ஓட்டங்களையும் அணியின் தலைவர் விராட் கோஹ்லி 78 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 80 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 42 ஓட்டங்களையும் பெற்று சிறப்பித்திருந்தனர்.

அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சில் அடம் சம்பா 3 விக்கெட்டுகளையும் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

Related posts

ரிஷாட்டுக்கு சிஐடி அழைப்பு!

G. Pragas

சற்றுமுன் விபத்தில் இருவர் பலி!

G. Pragas

பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன

G. Pragas