in ,

இயக்கச்சி பற்றைக்குள் கேட்பாரற்று நின்ற கார் – தீவிர விசாரணை!

கிளிநொச்சி – இயக்கச்சிக்கு அண்மித்த பகுதியில் பற்றை ஒன்றுக்குள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற கார் தொடர்பில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது.

குறித்த காரில் யாரும் இல்லாத நிலையில், அது அங்கே எப்போது கொண்டுவரப்பட்டது?, அது யாருக்குச் சொந்தமானது?, அசம்பாவிதங்கள் ஏதாவது மேற்கொள்ளப்படப்போகிறதா? போன்ற பல கோண விசாரணைகள் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

நேற்று (13) கண்டுபிடிக்கப்பட்ட இந்த காரின் கதவுகள் இன்று (14) விசேட அதிரடிப்படையின் உதவியுடன் திறக்கப்பட்டு பரிசோதனையிடப்பட்டது. காரின் பல பாகங்கள் திருட்டு போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு அதிவேக வீதியில் தொடராக 8 வாகனங்கள் விபத்து- வாகன நெரிசல்!

சாய்ந்தமருதில் சடலம் ஒன்று மீட்பு!