செய்திகள் யாழ்ப்பாணம் விளையாட்டு

சகல துறையிலும் ஜொலித்த இயலரசன்; யாழ் மத்திய கல்லூரி இனிங்ஸ் வெற்றி

இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான (பிரிவு 3, குழு 1) இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி கண்டி அசார் கல்லூரி மைதானத்தில் யாழ் மத்திய கல்லூரிக்கும் கண்டி அசார் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி அணி 64.1 பந்துப்பரிமாற்றங்களில் 398 ஓட்டங்களுக்கு 7 இலக்குகளை மாத்திரம் இழந்து ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. அணி சார்பாக நிதுசன் 138 ஓட்டங்களையும் இயலரசன் 75 ஓட்டங்களையும் கவிதர்சன் மற்றும் வியாஸ்காந் ஆட்டமிழக்காமல் அரைச் சதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அசார் கல்லூரி அணி 15.1 பந்துபரிமாற்றங்களில் 37 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தனர். கண்டி அசார் கல்லூரி அணி சார்பில் எவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பதும் குறிப்பிடத்தது.

யாழ் மத்திய கல்லூரி சார்பில் பந்துவீச்சில் இயலரசன் 6 இலக்குகளையும் விதுசன் 2 இலக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

மத்திய கல்லூரி அணித்தலைவர் வியாஸ்காந்தினால் பலோ வொன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அசார் கல்லூரி 53 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. பந்துவீச்சில் மத்திய கல்லூரி சார்பில் இயலரசன் 6 இலக்குகளை பெற்றுக் கொண்டார்.
போட்டி முடிவில் யாழ் மத்திய கல்லூரி அணி இனிங்ஸாலும் 308 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.

மத்திய கல்லூரிக்காக தொடர்ந்து சகல துறைகளிலும் பிரகாசிக்கும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் ஆரம்ப பந்துவீச்சாளருமான இயலரசன் கடந்த வடக்கின் போரில் 75 ஓட்டங்களயும் 5 இலக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாலவனப் பகுதியில் கஞ்சா செடிகள் அழிப்பு

reka sivalingam

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

Tharani

வரலாற்றில் இன்று- (02.04.2020)

Tharani