கிளிநொச்சி செய்திகள் பிராதான செய்தி

இரணைதீவு மக்களுக்கு வாக்களிக்கும் வசதிகள் இல்லை

கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

2017ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி குறித்த பகுதியில் தமது காணிகளில் பலவந்தமாக குடியேறியிருந்த மக்கள் முதன்முறையாக இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருந்தனர்.

இருப்பினும் தங்களுக்கு இம்முறை தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுவிக்கவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இரணைமாதா நகருக்கு சென்றே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளபோதும் அவர்களுக்கான படகு வசதிகளோ வேறு எந்த வசதிகளோ செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

Related posts

கசிப்பை ஒழிக்க காேரி பெண் ஒருவர் தனி ஆளாக போராட்டம்!

reka sivalingam

கடற்படையின் சுற்றாடல் பாதுகாப்பு திட்டத்திற்கு சீனா ஒத்துழைப்பு

Tharani

இந்திய ரி-20 அணி அறிவிப்பு

G. Pragas

Leave a Comment