in ,

இரணைமடு குளத்தால் பல பகுதிகளில் வெள்ளம்!

கிளிநொச்சி – இரணைமடுக் குளத்திலிருந்து தொடர்ந்தும் வெள்ளம் வெளியேறி வருவதால் கண்டாவளை பிரசேத்தில் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

தொடர்ந்தும் குளத்தின் நீர்மட்டம் 36 அடியைக் கடந்து காணப்பட்டுவருவதால் நீரை வெளியேற்றும் நடவடிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

கூடுதலாக நீரை வெளியேற்றினால் மக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகவேண்டிய ஏற்படலாம் என்பதால் நீர்வெளியேற்றும் அளவை மட்டுப்படுத்தி வைத்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 635 குடும்பங்களைச் சேர்ந்த 2,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன், 15 வீடுககள் பகுதியளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

சபாநாயகர் உட்பட 463 பேருக்கு பிசிஆர் சோதனை!

கிழக்கு முனையம் விற்கப்படாது – கோத்தாபய உறுதி!