செய்திகள் பிரதான செய்தி

இரண்டாவது நாளாகத் தொடர்கிறது தபால் மூல வாக்களிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இரண்டாவது நாளாக இன்று (01) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் முதல் நாள் நேற்று, மிகவும் அமைதியான முறையில் நடந்துமுடிந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்நிலையிலேயே இன்று இரண்டாவது நாள் தபால் மூல வாக்குப்பதிவு, பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறுகிறது.

இதற்கமைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட தபால் வாக்காளர்கள் இன்றும் வாக்களிக்கவுள்ளனர்.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தபால் வாக்காளர்களின் தபால் மூல வாக்குப்பதிவு 04ம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 07ம் திகதி வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“மனைவி ஒருவரை பெற்று, குழந்தையை உருவாக்குங்கள்” – சர்ச்சையில் சிக்கிய ரோஹித

G. Pragas

யாழில் ஒரு வாரமாக கொரோனா இல்லை!

G. Pragas

“பகிடிவதை பாேர்வையில் பாலியல் சேட்டை” எதிராக நாளை போராட்டம்!

கதிர்