செய்திகள்

இரண்டு தடவைகள் சாட்சியமளித்தார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (16) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இரண்டு முறை ஆஜராகி சாட்சியமளித்தார்.

முன்னதாக, இன்று காலை குறித்த ஆணைக்குழுவின் முன்னால், சுமார் ஒன்றரை மணி நேரம் பிரதமர் சாட்சியம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு பிரதமருக்கு சாட்சியமளிக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணி அளவில் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

அத்துடன், பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வௌ்ளை வான் சாரதிகள் நீதிமன்றில் முன்னிலை

கதிர்

பி​டியாணைக்கு எதிரான மனுவை மீளப் பெற்றார் ராஜித

கதிர்

யாழில் கொரோனா தொற்றுச் சாத்தியம் குறைவு; அஞ்சாதீர்கள் – சத்தியமூர்த்தி

reka sivalingam