கிளிநொச்சிசெய்திகள்

இரண்டு வாள்களுடன் இருவர் கைது!

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி மாயவனுர் பகுதியில், நேற்று முன்தினம் இரண்டு வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டனர் என்ற பொலிஸார் தெரிவித்தனர்.

சிறப்பு அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரையும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,939