செய்திகள்

இரத்தினபுரியில் ஆணின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி – காவத்தை பிரதேசத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

காவத்தை பொலிஸ் நிலையத்திற்குற்பட்ட ஓபாத்த, இலக்கம் ஒன்று பிரிவில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தினை மலசலகூட குழியில் இருந்து காவத்தை பொலிசார் இன்று (22) மீட்டுள்ளனர்.

ஒப்பாத்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய மதுரப்பெரும ஆராச்சிலாகே நிசங்க விஜேசிறி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டின் மலசலகூடம் துர்நாற்றம் வீசுவதாக கொலைசெய்யப்பட்டவரின் மனைவியான ஜயகொடி ஆராச்சிலாகே சுமனா ருவான் குமாரி காவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளில் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக காவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அதுல பெரேரா தெரிவித்தார்.

Related posts

கணவனை இழந்த பெண்ணுக்காக வீடு கட்டும் இராணுவம்!

G. Pragas

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

reka sivalingam

கபில தம்பதிக்கு மறியல்!

reka sivalingam