செய்திகள் வவுனியா

இராணுவத்திடம் உள்ள கூட்டுறவு பயிற்சி நிலையத்தை விடுவிக்க கோரிக்கை!

வவுனியா – பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்தினை இராணுவத்திடமிருந்து விடுவித்து தருமாறு கூட்டுறவு ஆணையாளர் இந்திரா சுபசிங்க ஒருங்கிணைப்பு குழுவிடம் கோரிக்கை விடுத்தார்

வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

“பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனம் நீண்ட காலமாக புனர்வாழ்வு இணைப்பு காரியாலயமாக செயற்பட்டுவருகின்றது. அதனை விடுவிக்குமாறு பல்வேறு தரப்பிடம் கோரிக்கைகளை முன்வைத்தும் அது இன்னும் விடுவிக்கப்படவில்லை” என அவர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத்தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு.திலீபன் இராணுவத்தின் வசம் உள்ள அரச கட்டிடங்கள் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டு வருகின்றது. குறித்த மாகாண கூட்டுறவு பயிற்சிநிலையமும் விரைவில் விடுவிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Related posts

மிதாலி ராஜ் ஓய்வு பெறுகிறார்

admin

தீப்பரவி 3 ஏக்கர் எரிந்து நாசம்!

reka sivalingam

மேலும் எண்மருக்கு கொரோனா

reka sivalingam