செய்திகள் விளையாட்டு

இராணுவம் நடாத்திய கால்பந்தாட்ட தொடரில் நவிண்டில் கலைமதி சம்பியன்

எள்ளங்குளம் இராணுவ படையணியினரால் இளைஞர்களுக்கு இடையிலான நல்லுறவை வளர்க்கும் நோக்குடன் வடமராட்சியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட தொடரில் நவிண்டில் கலைமதி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.

இதன் இறுதியாட்டம் இன்று (12) குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து குஞ்சர்கடை கொலின்ஸ் அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் கலைமதி அணி வீரர் விஜிதரன் மிகச் சிறப்பான கோலைப் பதிவு செய்ய 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது நவிண்டில் கலைமதி அணி.

இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர்.

ஆட்டம் முடிவடைவதற்கு சில நிமிடங்கள் இருக்கும் போது நவிண்டில் கலைமதி அணி வீரர் முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த கொலின்ஸ் அணிக்கு நேர் உதை கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்திய கொலின்ஸ் அணி வீரர் விமல்ராஜ் ஒரு கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் போட்டு சமநிலை வகித்தனர்.

இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் நவிண்டில் கலைமதி அணி 8:7 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.

Related posts

திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு செய்ய வேண்டாம் – வேலு

reka sivalingam

கற்றாளை செய்கை இராஜாங்க அமைச்சர் அமீர் அலியால் ஆரம்பிப்பு

G. Pragas

சேதன நெற்செய்கை வயல் விழா

Tharani