செய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி

இராணுவ அதிகாரியின் வீட்டில் பெருமளவு வெடி பொருட்கள்

குருணாகல் பொலிஸ் பிரிவு – கோவகொட்டுவ சந்தியில் நேற்று முன்தினம் (31) மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த இருவர் ரி-56 ரக துப்பாக்கி, அதற்கான தோட்டாக்கள் 10 உடன் கூடிய மெகசின் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டனர்.

புத்தளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் குருணாகல், தாஹிகமுவ பகுதியை சேர்ந்த 46 வயதுடைய இராணுவச் சிப்பாயும், நிட்டம்புவ, வதுபிட்டிவல விஜயபா பாபல ரெஜிமேன்டின் இராணுவ அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீட்டை குருணாகல் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் நேற்று சோதனையிட்டனர். இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டியவரின் வீட்டில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்று, அதனை சுத்தம் செய்வதற்கான கருவிகள், இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட ரைபில் ஒன்று, துப்பாக்கிகளுக்காக பயன்படுத்தும் தொலைநோக்கு கருவி ஒன்று, போரா 12 துப்பாக்கிகளுக்காக பயன்படுத்தும் வெற்று தோட்டாக்கள் 6, இராணுவத்தினர் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் 2, பெல்ட் ஓடர் 2 மற்றும் பல பொருட்கள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சந்தேக நபர்களை நேற்று குருணாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 48 மணிநேர தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

Related posts

வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு!

Tharani

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவு

கதிர்

யாழில் சாதனைச் செல்வி ஆஷிகா

Bavan

Leave a Comment