செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

இராணுவ வாகனம் மோதி காயமடைந்த இளைஞனை தடுத்து வைத்த பொலிஸ்

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு, இராமசாமி பரியாரியார் சந்தியில் (பழம்சந்தி) இன்று (01) இராணுவ வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகி காலில் காயமேற்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று சுமார் இரண்டு மணி நேரம் தடுத்து வைத்து விட்டு கோப்பாய் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருநெல்வேலி சந்தியில் பக்கம் இருந்து கல்வியங்காடு சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞனை, இராசபாதை வீதியூடாக நல்லூர் பகுதியை நோக்கி சென்ற இராணுவத்தின் யூகா 50320 எனும் இலக்கமுடைய கப் ரக வாகனம் மோதி தள்ளியதில் கல்வியங்காடு பகுதியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மோதி விபத்துக்கு உள்ளானாா்.

குறித்த விபத்தினால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் அறிந்து அவ்விடத்திற்கு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வந்திருந்த சீருடை மற்றும் சிவில் உடை அணிந்த பொலிஸார் விபத்து நடைபெற்ற இடத்தில் கூடியிருந்தவர்களை அங்கிருந்து மிரட்டி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் காயத்திற்கு உள்ளான இளைஞனை கைது செய்த பொறுப்பதிகாரி தனது வாகனத்தில் ஏற்றியதுடன், விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிளை சிவில் உடையில் வந்த கோப்பாய் காவல்துறையினா் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றார். அதேவேளை விபத்துக்கு உள்ளான கார் மற்றும் இராணுவத்தின் வாகனம் என்பவற்றையும் காவல் நிலையம் எடுத்து சென்றனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் நின்றவர்களும் விபத்துக்கு உள்ளான இளைஞனில் தவறில்லை ஏன் கைது செய்தீர்கள் என கேட்ட போதும் கோப்பாய் பொலிஸார் எந்த பதிலும் அளிக்காமல் இளைஞனை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

அதனால் அவ்விடத்தில் நின்றவர்களும் இளைஞனுடன் பொலிஸ் நிலையம் நோக்கி சென்ற போது பொலிஸ் நிலைய வாயில் கதவை சாத்திய பொலிஸார் விபத்திற்கு உள்ளான இளைஞனை மட்டும் பொலிஸ் நிலையத்தினுள் அழைத்து சென்று தடுத்து வைத்திருந்தனர். அதன்போது பொலிஸ் நிலையத்திற்குள் சென்ற இராணுவ புலனாய்வு பிரிவினர் விபத்துக்கு உள்ளான இளைஞனை மிரட்டும் தொனியில் விசாரணை செய்ததுடன், இளைஞனின் விபரங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு இராணுவத்தின் கப்டன் தர அதிகாரியுடன் சிவில் உடையில் வந்த இராணுவ உயர் அதிகாரியொருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தனியே சந்தித்து கதைத்த பின்னர் விபத்துக்கு உள்ளான இளைஞன் மற்றும் கார் உரிமையாளர்களை தனித்தனியே அழைத்து மிரட்டும் தொனியில் கதைத்து விபத்து சம்பவம் தொடர்பில் சமரசமாக செல்ல நிர்பந்தித்துள்ளார்கள்.

அதேவேளை இராணுவ வாகனத்தில் தவறில்லை எனவும், விரும்பின் காரின் செலவினை விபத்துக்கு உள்ளன இளைஞனிடம் இருந்து பெறும் மாறும் கூறியுள்ளார். அதன் பின்னர் இராணுவத்தினர் தமது விபத்துக்கு உள்ளான வாகனத்தை எடுத்து சென்றனர். அதனை தொடர்ந்து கார் உரிமையாளரும் விபத்துக்கு உள்ளான இளைஞனின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுவிட்டு தனது காரினை எடுத்து சென்றார். இளைஞனின் மோட்டார் சைக்கிளும கையளிக்கப்பட்டது.

இளைஞனை தடுத்து வைத்து விசாரணை செய்வது தொடர்பில் அவரது நண்பர் ஊடாக சட்டத்தரணி ஒருவருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த சட்டத்தரணி பொறுப்பதிகாரியை சந்திக்க வேண்டும் என பொலிஸாரிடம் கோரிய போதிலும் அவரை சந்திக்க முடியாது என தடுத்து நிறுத்தினார்கள் என தெரியவருகிறது. அவ்வேளை விபத்துக்கு உள்ளான இளைஞன் அவ்விடத்திற்கு வந்த போது, இளைஞனிடம் சட்டத்தரணி சம்பவம் தொடர்பில் கேட்டறிய முற்பட்டார். இதன்போது சிவில் உடையில் நின்ற பொலிஸார் சட்டத்தரணியை இளைஞனுடன் கதைக்க விடாது தடுத்ததுடன், பொறுப்பதிகாரியின் அனுமதி இன்றி கதைக்க முடியாது என கூறி இளைஞனை சட்டத்தரணியுடன் கதைக்க அனுமதிக்காது தம்முடன் அழைத்து சென்று பொலிஸ் நிலையத்தினுள் இருத்தி வைத்தனர்.

காரின் உரிமையாளர் காரின் செலவினை ஏற்குமாறு விபத்துக்கு உள்ளான இளைஞனிடம் தொலைபேசி ஊடாக கேட்பாராயின் தான் விபத்து சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் செல்லத் தயார் என்று பாதிக்கப்பட்ட இளைஞன் கூறியுள்ளார்.

Related posts

மில்லியன் ரூபா பெறுமதியான பணத்துடன் ஐவர் கைது

G. Pragas

ஆட்சி ஏற்றதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது விசாரணை

Tharani

இன நல்லுறவுக்கான தேசிய பொங்கல் விழா!

G. Pragas