செய்திகள்

இராணுவ வீரரொருவரின் சடலம் கண்டுபிடிப்பு

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவ வீரர் ஒருவரின் சடலம் இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தம்பலகாமம் – 96ம் கட்டை திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த ஐயந்த கொடிகார (35 வயது) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை இராணுவ 22 வது படைப்பிரிவில் கடமையாற்றும் இவர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றதாகவும் அரச மர சந்தியில் சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

Related posts

கொரோனாவினால் சிக்கலில் “ராஜித – சரத்” சிசிடி விசாரணை ஆரம்பம்!

G. Pragas

திருமலை காட்டுப் பகுதியில் சடலம் மீட்பு!

reka sivalingam

சாம்பல் பட்டியலில் இருந்து இலங்கை விடுவிப்பு

G. Pragas

Leave a Comment